Thursday, 2 July 2020

Tamil books நாசூக்காக வாழ்வது எப்படி?: இது பள்ளிக்கூடங்களில் கற்றுத் தராத வாழ்க்கைப் பாடம்

Best Offers Best Offers Best Offers
இந்த உலகத்தில் பலர் யாரிடம் எப்படி பேச வேண்டும், தன்னுடைய பேச்சால் உருவாகும் இக்கட்டான சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது என்பது பற்றி தெரியாமல் தவிக்கின்றனர். பள்ளிக்கூடத்தில் அறிவியலை பற்றியும் வரலாற்றைப் பற்றியும் சொல்லித் தருகிறார்களே தவிர வாழ்கைப் பாடத்தை கற்றுத் தருவதில்லை.

எப்பேர்பட்ட சூழ்நிலைகளையும் தாண்டி முகத்தில் சிரிப்புடன் வாழும் சாமர்த்தியத்தை தான் நாசூக்கு என்போம். பலவிதமான மனிதர்கள் வாழும் உலகம் இது. அனைவரிடமும் ஒரே மாதிரி நடந்து கொள்வது சாத்தியமில்லாத ஒன்று. நாசூக்காக பேசத் தெரியாமல் நகைச்சுவை நடிகர் செந்தில், கவுண்டமணியிடம் அடி வாங்குவதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். இது நிஜ வாழ்க்கைக்கும் பொருந்தும்.

ஒருவருக்கு வெடுக் வெடுக் என்று கோபம் வந்தால், மற்றவர்களின் செயல்களால் நிம்மதி இல்லாமல் தவித்தால், எப்பொழுதும் பிறரிடம் ஒப்புதல் வேண்டி அலைந்தால், பிறர் என்ன நினைப்பார்களோ என்று பயந்து வாழ்ந்தால் அவர் தன் உணர்ச்சிகளுக்கு அதிகமாக இடம் கொடுக்கிறார் என்று அர்த்தம். சில சமயங்களில் உணர்ச்சிகளுக்கு உட்பட்டு வார்த்தைகளை வெளியேவிட்டால் அது பல விளைவுகளை உண்டாக்கும். ஒருவருக்கு நாசூக்காக வாழ தெரிந்தால் அவர் இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஆளாக மாட்டார்.

உங்கள் மீது ஏறி செல்வதற்கு மனிதர்களுக்கு இடங்கொடுத்தாலும் அவர்கள் அதிலும் குறை கண்டுபிடிப்பர். நீங்கள் உங்கள் வாழ்கையை வாழுங்கள். அந்த வாழ்க்கையை எப்படி நாசூக்காக வாழ்வது என்ற கேள்விக்கு இந்த புத்தகத்தின் பக்கங்களை புரட்டுங்கள்.

உங்கள் வாழ்வில் வழி பிறக்கும்.

No comments:

Post a Comment

Fitness Products

Tamil Best Books Zero to Hero

Best Offers Best Offers Best Offers