Thursday, 2 July 2020

Tamil Books download மனக்கூண்டு: மனதை பற்றி எவரும் அறியாத உண்மைகள்

Best Offers Best Offers Best Offers
மனதை பற்றி பலர் அறிந்திராத விஷயங்கள் உள்ளன. மனோசக்தி, மனோவசியம், மனக்கட்டுப்பாடு, ஆழ்மனதின் இயல்புகள் ஆகியவை இந்த புத்தகத்தில் தெளிவாக உதாரணங்களோடு விளக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம், அறிவியல், வரலாறு என்று பலவற்றை கற்றுக் கொடுக்கும் பாடசாலைகள் தனக்குள் எந்நேரமும் பேசிக்கொண்டிருக்கும் குரலைப் பற்றி, தன் மனதைப் பற்றி ஏனோ கற்றுத் தருவதில்லை. இதைப் பற்றி கேள்வி கேட்டாலும் இது வாழ்க்கைக்கு தேவையில்லாதது என்று உதாசினபடுத்திவிடுகிறார்கள். பின் மனசோர்வு, மனஉளைச்சல், தாழ்வு மனம்பான்மை போன்ற பல மனநோய்களால் சிக்கித் தவிக்கிறார்கள்.

தன் மனதை எப்படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது என்பதை பற்றிய அறிவின்மையால் பலர் தன் மனதாலேயே அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். தன் மனதை அறிந்தவர்கள் சிலர் அதை பிறருக்கு போதித்து அவர்களை தெளிவடையச் செய்கிறார்கள். ஆனால் சிலர் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பிறரை மனோவசியம் செய்து லாபம் தேடிக் கொள்கின்றனர்.

மனம் மனிதனிடம் எவ்வாறு விளையாடுகிறது, நம்மை எப்படி அடிமைப்படுத்துகிறது. நம்மையறியாமல் நம்மை மனோவசியம் செய்பவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி?, மனதின் மாயையை அறிந்து கொண்டு அதிலிருந்து விடுபடுவது எப்படி?, ஆழ்மனம் என்பது என்ன?, நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?, பிரபஞ்ச சக்திக்கும் மனதிற்கும் என்ன தொடர்பு?, மனசோர்வு, மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து விடுபடுவது எப்படி?, போன்ற பல கேள்விகளுக்கு பதில்கள் சிறு சிறு கதைகளின் உதாரணத்தோடு இந்த  நூலில் பதிந்துள்ளன. இந்த நூல் தங்கள் வாழ்க்கையை ஆக்கப்பூர்வமான வழியில் மாற்றியமைக்கும் என நம்புகிறேன்.

No comments:

Post a Comment

Fitness Products

Tamil Best Books Zero to Hero

Best Offers Best Offers Best Offers